இதன் அடிப்படையில்,
உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் வழிகாட்டலில் கீழோ வருகின்ற ஆக்கம் அல்லது வரைபு தீனம் தினம் மாறுதலுக்கு உள்ளாகும் ! குறிப்பிட்ட கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் ! எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி வரவேற்கின்றேன்..
தேவையான சிறந்த கணித / நிர்வாகப் பயன்பாட்டு வசதிகளோடு ஒரு இணையத்தளத்தை வடிவமைக்க வேண்டும்.இதன் மூலம் எண்ணிக்கை வரையறை இல்லாமல் பங்குதாரர்களை இணைக்க வேண்டும். இணையத்தள பதிவுகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பங்குதாரர்கள் ஒவ்வொருவரும் மல்ட்டி மீடியாவுடன் இணைந்த நேரடி தொடர்பாடலில் ஒருங்கமைக்கப்பட்டு நிர்வாகம், கணக்குவழக்குகள் மற்றும் தொடர்புடைய பயிற்சிகள், பராமரிப்பு செயல்ப்பாடுகள் அனைத்தும் செயல்ப்படுத்தப்பட வேண்டும்.
உலகின் எந்த ஒரு மூலையிலும் 10 பங்குதாரர் களுக்கு மேல் இணைந்துள்ள ஒவ்வொரு ஊரிலும் சாத்தியமான வசதிகள் உள்ள, ஆனால் பயன்பாட்டில் இல்லாத வருங்கால அரச திட்டங்களுக்கு உட்படாத அரச அல்லது பொது நிலங்களை தேர்வு செய்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் தகுதியானவர்களின் துணையுடன் கேட்டு பெற வேண்டும்.
இந்த நிலங்களில் சுற்றுப் புற சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கக் கூடிய மின் சக்தியை உருவாக்கக் கூடிய பொறிமுறைகளை அமைக்க வேண்டும்.
அதாவது சூரிய சக்தி மற்றும் சிறிய ரக காற்ராலைகள், ஆறு மற்றும் கடல் நீர்மின் ஆலைகளை முதலில் சிறிய அழவில் அங்கங்கு அமைக்கவேண்டும் . இதற்காக தனவந்தர்கள் மற்றும் அரச சார்புள்ள / இல்லாத நிறுவனங்களிடமும் வங்கிளகிடமும் தேவையான நிதி ஆதாரங்களையும் ஆலோசனைகளையும் சிறந்த வழிகாட்டல்களோடு சம்பந்தப்பட்ட பயிற்சிகளையும் கேட்டு பெறவேண்டும்.
மேலும் அந்த நிலங்களில் குறைவான பராமரிப்பில் சூழ்நிலையை அனுசரித்து வழர்ந்து நீண்ட காலம் நிறைந்த பயன்தரக்கூடிய மரங்களை நட்டு வழர்க்க வேண்டும்.
மற்றும் இயற்கையான பசுமை விவசாய முயற்சிகளோடு மீன், இரால், நண்டு மற்றும் நாய், ஆடு, மாடு போண்ற சாத்தியமாக் கூடிய வகையிலான விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட வேண்டும்.
எக் காலமும் மாறுதல்களுக்கு உட்படாததும் எண்றும் நிரந்தரமானதுமான சில அடிப்படை நிறுவன சட்டதிட்ட விதிமுறைகளோடு திருக்குறள் மூல யாப்பாக இருக்கும்.
அனைத்து நடவடிக்கைகளின் போதும் திருக்குறள் அதிகாரங்களின் அடிப்படையில் தனித்தனி குறள்கள் மற்றும் அவற்றுக்கான விளக்க உரைகளிணூடாக (internet) இணைய அவையில் திருக்குறள் சார்ந்த புலமை உள்ள பங்குதாரர்களால் விவாதிக்கப்பட்டு நான்கில் மூண்று பங்கிற்கும் அதிகமான பங்குதாரர்கள் மற்றும் வாரிசு உருமை உள்ள நிரந்தர விமர்சன பங்கு தாரர்கள் 5 பேரில் 2 பேரின் ஒப்புதலோடு நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் குறிப்பிட்ட நாட்டு சட்டதிட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் முடிவுகள் எடுக்கப்படும். மேலும் ஒரு அரசாங்கத்தின் நிர்வாக துறைகளுக்கு இணையான துறைகளை இங்கும் ஆரம்பித்து அதன் மூலம் நிறுவனத்தை நிர்வாகப்படுத்தல் வேண்டும்.
1. நிறுவனத்தின் யாப்பு மற்றும் சட்ட திட்ட விதி முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
2. வயது வரம்பு கிடையாது.ஆண்,பெண்,இளையவர்,முதியவர்,சாதி,மதம் எண்ற எந்தப் பேத பிரிவினையும் கிடையாது.
3. கல்வித் தகுதி குறைந்த பட்சம் தமிழ் மொழி மூலம் ( கம்பியூட்டர்களில் ) தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். அல்லது கற்றுக்கொள்ள ஒப்புதல் தர வேண்டும். இதற்கு உரிய பயிற்சிகள் மற்றும் தொடர்புடைய மென்பொருட்கள் எமது இணையத்தளம் மூலம் வழங்கப்படும்.
4. ஏதாவது ஒரு மதத்தை அதன் விதிமுறைகளுக்கு அமைவாக பின்பற்ற வேண்டும். அல்லது யோகாசனம், தியானம் போண்ற முயற்சிகளில் எமது இணையத்தள வளிகாட்டல்கள் மூலம் ஈடுபட ஒப்புதல் தர வேண்டும்.
5. தினமும் இரண்டு மணி நேரம் அல்லது வாரம் 14 மணி நேரம் அல்லது மாதம் 60 மணி நேரம் நிறுவன பணிகளில் முழு மணதுடன் ஈடுபடவேண்டும்.
பங்கு தாரரின் உருமைகள் :-
1. ஒருவர் பங்காளராக இணைந்த ஒரு மாதத்தின் பின்னர் அவருக்கு எண்று தனிப்பட்ட வங்கிக் கணக்கு ATM காட் இதன் மூலமான மாதாந்த ஊக்கத்தொகை மற்றும் மருத்துவம், விபத்து, மரண ஆதாதரம் போண்றவை தொடர்பிலான இன்சூரன்ஸ் வசதிகள் வழங்கப்படாவிட்டால் அதனைக் கேட்டு பெற உருமை உள்ளவர்.
நோயுற்ற போது சக பங்காளர்களின் பராமரிப்பு மரணத்தின் போது நல்லடக்கம் போண்றவற்றுக்கு உருமை உள்ளவர்.
2. பங்குதார் ஒருவரை நீக்கும் அதிகாரம் நிறுவன விமர்சன பங்குதாரர் மற்றும் நிர்வாக சபை உட்பட எவருக்கும் கிடையாது. ( ஆனால் தகுதியான காரணங்களின் அடிப்படையில் நிறுவன நன்மை கருதி குறிப்பிட்ட மிகக் குறுகிய ( அதிக பட்சம் ஒருமாத ) காலத்திற்கு பணி இடைநிறுத்ம் செய்யும் அதிகாரம் விமர்சன பங்காளர்களுக்கு உண்டு. மேற்படி காலத்தில் நிறுவனம் சார்ந்த கொடுப்பனவுகள் உதவிகள் அன்னைத்தும் இடை நிறுத்தப்படும். தவிர மேற்படி காலத்தில் நிறுவன வளாகத்திற்குள் நுளையவும் அனுமதிக்கப்பட மாட்டார்.)
2. பங்குதாரர் ஒருவர் நிறிவன விதிகளுக்கு அமைவாக தான் நினைந்த எந்த நேரத்திலும் நிறுவனத்திற்கு செல்லவும் வெளியேறவும் உருமையுடையவர்.
3. பங்காளர் ஒருவர் நிறுவன வளாகத்தில் தூங்கவும், ஆரோக்கியம், மருத்துவம், உணவு, கல்வி, பயிற்சி, வேலை, ஆன்மீகம் பொழுது போக்கு முயற்சிகளில் பங்கெடுக்கவும் உருமை உடையவர்
4. குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாமாக நிறுவன பணிகளில் ஈடுபடுபவர் மேலதிக சலுகைகளை உருமைகளை, எதிர்பார்க்கும் உருமை உள்ளவர் இது பற்றி நிர்வாகம் முடிவு செய்யும்.
பங்காளர்கள் தொடர்பில் நிறுவனத்தின் கடமைகள் :-

